தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று, தமிழகத்தில் உள்ள பிரபல கட்சியின் தலைவரையும் அவரது அக்கட்சியயும் கிண்டல் செய்யும் விதமாக ஒரு டுவீட் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், ’பெரிய கார்ப்பரேட் நிறுவனம் தான் போல. 34 வீடியோவுக்கே இவ்வளவா ? கிடைக்கிற கேப்ல எல்லாம் பேசி இருக்கிறாரே, கஜானா தாங்குமா ? கார்ப்பரேட் ஆலோசகர் ஆழம் தெரியாம காலை விட்டுட்டார் போல ‘ என பதிவிட்டு, தமிழகத்தில் பிரபல வார பத்திரிக்கையான’ ஜூனியர் விகடன் ’-ல் வெளியான ஒரு பதிவையும் புகைப்படம் எடுத்து அதை ஜூனியர் விகடனுக்கும் டேக் செய்துள்ளனர்.
அந்த ஜூனியர் விகடன் பதிவில் கூறியுள்ளதாவது :
பெரிய கட்சித் தலைவர் ஒருவர் பேசுவதையெல்லாம் கிண்டலடித்து சிலர் ‘யூ டியூப்’பில் வீடியோக்களாக வெளியிடுகின்றனர்.
இந்த வீடியோக்கள் வைரலாகி அந்தத் தலைவரின் இமெஜையே சரிப்பதாக சம்பந்தப்பட்ட கட்சியின் ஐ.டி,. விங் கணக்கெடுத்துள்ளது. தலைவரை கிண்டலடிப்பதாக இருக்கும் வீடியோக்களை நீக்குவதற்கு, சமீபத்தில் ஒரு ஐடி நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
போட்ஸ் எனப்பட்டும் தானியங்கி நிரல் மூலம் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு அதிகமகா ரிப்போர்ட் அடித்து யுடியூப் தளத்தில் இருந்து நீக்கும் பணியை இந்தத் தனியார் நிறுவனம் செய்கிறது. ஒரு வீடியோவை நீக்குவதற்கு ரூ. 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.
இப்படி இதுவரை 34 வீடியோக்களை சம்பந்தப்பட நிறுவனம் நீக்கியிருப்பதாக தகவல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.