Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் விடுமுறைக்கு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (10:34 IST)
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற விடுமுறை தினங்களில் தமிழக அரசின் போக்குவரத்து துறை சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தொடர் விடுமுறை கிடைக்கும் என்பதால் சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். 
 
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான அரசு பேருந்துகளில் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.   ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதை அடுத்து இந்த தேதிகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் இந்த முன்பதிவை நேரில் அல்லது  இணையதளம் அல்லது செயலியில் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த முன்பதிவு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments