Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கலுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு!

Advertiesment
பொங்கல்
அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 
 
பொங்கல் விடுமுறை வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து வரவுள்ள நிலையில் புதன் அல்லது வியாழக்கிழமையில் இருந்து சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் கிளம்பி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ள நிலையில் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது
 
மேலும் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்கள் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகத்தில் 12 ஆயிரம், பெங்களூரில் மட்டும் 9 ஆயிரம்: தாண்டவமாடும் கொரோனா