Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்

Advertiesment
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்
, திங்கள், 15 மே 2017 (12:14 IST)
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 85 வயதான எஸ்.ராமசாமி கடந்த 1972 மற்றும் 1974 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் முதல்வராக பதவி வகித்தவர்.


 
 
தற்போது காங்கிரஸ் கட்சியில் சிறப்பு அழைப்பாளராக உள்ள ராமசாமி 1974-இல் 21 நாட்களும், 1978-இல் 15 மாதங்களும் முதல்வராக பதவி வகித்தவர். இவர் வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான காரைக்காலில் இன்று நடக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டு உடைத்த ரஜினி : மறுப்பு தெரிவிக்கும் தமிழிசை