Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”முரசொலி நிலத்தை திரும்ப கொடுங்கள்.. 5 கோடி தருகிறோம்” ஸ்டாலினுக்கு சவால் விடும் பொன்னார்

Arun Prasath
திங்கள், 18 நவம்பர் 2019 (12:37 IST)
பஞ்சமி நிலம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிற முரசொலி நிலத்தை ஸ்டாலின் திரும்ப கொடுத்தால், அவருக்கு 5 கோடி தர பாஜக தயாராக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

சமீபத்தில் அசுரன் திரைப்படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “பஞ்சமி நில மீட்பை பேசும் அசுரன் திரைப்படம் படல் அல்ல, பாடம்” என பகிர்ந்தார். ஸ்டாலினின் டிவிட்டை குறிப்பிட்டு, பாமக தலைவர் ராமதாஸ், “அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்திற்காக வலைக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என அந்த நிலத்திற்குரிய பட்டாவை காட்டினார்.

இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்” திமுக அறைக்கட்டளைக்கு சொந்தமான நிலம் பஞ்சமி நிலம் என கூறப்படுகிறது. அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் ஸ்டாலின அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என கூறினார்.

மேலும், “முரசொலி நிலம் 5 கோடி மதிப்பு என கூறப்படுகிறது. ஸ்டாலின் அந்த நிலத்தை அரசுக்கு கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு 5 கோரி இழப்பு என்றால், அந்த 5 கோடியை பாஜக தர தயாராகவுள்ளது” என பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 மெகாபிக்சல் கேமரா.. ஆண்ட்ராய்டு 15.. இன்னும் பல..! அசத்தும் சிறப்பம்சங்களுடன் வெளியான Vivo X200 5G!

இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை எச்சரிக்கை..!

நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டி கொலை: நெல்லையில் பயங்கரம்..!

மக்களவையை காலவரையின்றி ஒத்திவைத்த சபாநாயகர்.. குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததா?

பொங்கல் அன்னைக்குதான் தேர்வு நடத்த தோணுமா? மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments