Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆதரவளிக்கும் கட்சிதான் வெற்றிபெறும் – பொன்னார் குழப்பமான பதில் !

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:48 IST)
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, இதுவரை அதிமுகவுக்கு ஆதரவளிக்காத நிலையில் தற்போது குழப்பமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதில் காங்கிரஸைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக மற்றும் தமாக ஆகியவை ஆதரளவு அளித்துவிட்டன. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அமைச்சர்கள் சென்று ஆதரவு பெற்றுள்ளன. இந்நிலையில் கூட்டணியில் இருக்கும் பாஜக மட்டும் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்  ‘நாங்குநேரி தொகுதியை அதிமுகவிடம் இருந்து பாஜக கேட்கவில்லை. இடைத்தேர்தல் தொடர்பான முடிவுகளை அகில இந்தியத் தலைமைதான் எடுக்கும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றிபெறும்’ எனத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்குள் இருந்துகொண்டே அவர் இவ்வாறு பேசியிருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments