Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசு இல்லா பட்டாசு உருவாக்க அடித்தளம் அமைக்கும் களம் அமைக்கப்பட்டு விட்டது-மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி!

J.Durai
புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:20 IST)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் "பட்டாசு தொழிலில் பாதுகாப்பு குறித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கலந்துரையாடல் கூட்டம்,நாக்பூர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாடு முதன்மை அதிகாரி பி.குமார்  தலைமையில் நடைபெற்றது.
 
இதில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை  இணை அமைச்சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். 
 
அப்போது உற்பத்தியாளர்கள் தரப்பில் பட்டாசு தொழிலை பாதுகாப்பது சம்மந்தமாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
 
பின்னர் பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், தொழிலாளர்களின் பாதுகாப்பில்,அவர்களது ஆரோக்கியத்தில் உற்பத்தியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்.......
 
வெடிவிபத்து, பொழுது போக்கின் மதிப்பு,விற்பனையின் மதிப்பு,பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்தொழில் எவ்வாறு முதன்மை பெறுகிறது,பட்டாசு தொழில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை தருகிறது என்பதெல்லாம் முக்கியம் என்பதை பொறுத்து பட்டாசு தொழில் முதன்மை பெறுகிறது என்றார்.
 
பட்டாசுத் தொழிலில் புது சிந்தனைகளை புகுத்தி விபத்தில்லா பட்டாசு,மாசு இல்லா பட்டாசை உருவாக்க அடித்தளம் அமைக்கும் களம் அமைக்கப்பட்டு விட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.
 
மேலும் இன்று நடைபெற்ற கலந்துரையாடலை ஆவணப்படுத்தி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைத்து, பட்டாசு தொழிலை தொடர்ந்து பாதுகாக்க, தமிழ்நாட்டை தமிழ் பண்பாட்டை நேசிக்கும் ஒருவனாக  மலையாளத்தின் மகனாக அவரிடம் இத்தொழிலை பாதுகாக்க முயற்சி செய்வேன் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments