Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசிந்தது அமோனியா வாயு தான்: உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (07:48 IST)
சென்னை எண்ணூர் தொழிற்சாலையிலிருந்து கசிந்தது அமோனியா வாயு தான் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. 
 
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியா எடுத்துவரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் சற்றுமுன் உறுதி செய்துள்ளது. 
 
ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா அளவு தற்போது 2090 மைக்ரோ கிராம் இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் 5 மில்லிகிராமாக இருக்க வேண்டிய அமோனியா தற்போது 49 மில்லிகிராம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு கடல் சார்ந்த வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் அமோனியா வாயு கசிந்த கோரமண்டல் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments