Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

தடுப்புக் கட்டை மீது சலம்பிய பேருந்து! – வைரலாகும் வீடியோ!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 24 ஜனவரி 2022 (10:12 IST)
பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டை மீது சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தால் அனைத்து நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கிராம பகுதிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும், பேருந்துகள் தரமானவையாக இல்லை என்றும் அவ்வபோது புகார்கள் எழுந்து வருவது வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கிராமப்பகுதி ஒன்றிற்கு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று ஜமீன் ஊத்துக்குளி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பக்கட்டையில் ஏறியது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் டிரைவர் தடுப்பு கட்டை மீதே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதை சாலையில் சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நார்வேயில் மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் தாலிபன் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை