சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் தேர்தலில் அரசியல் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவது உறுதி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரஜினிக்கு எதிராக களமிறங்க கூடிய வகையில் இப்போதைய அரசியல்வாதிகள் யாரும் இல்லை என்பதால் ரஜினிக்கு இணையான ஒரு நடிகரை களமிறக்க அனைத்து அரசியல்வாதிகளும் காத்திருந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் வருமான வரித்துறையினர் ரஜினிக்கு சலுகை செய்தததையும், விஜய் வீட்டில் ரெய்டு செய்ததையும் வைத்து ரஜினிக்கு எதிராக விஜய்யை தமிழக அரசியல்வாதிகள் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று சென்னை மண்ணடியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தமிமுன் அன்சாரி இதனை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். அவர் இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசியபோது, ‘பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ரஜினி என்று பாஜகவின் இயக்கத்தில் நடித்து வருவதாக விமர்சனம் செய்தார். நடிகர் விஜய்க்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதை தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்
ரஜினிக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் அவர் பேசியதிலிருந்து ரஜினிக்கு எதிராக விஜய்யை களமிறக்க அரசியல்வாதிகள் முயற்சிப்பது தெளிவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்