முதல்வர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் மீது புகார்.. பரபரப்பு தகவல்..!

Mahendran
சனி, 27 செப்டம்பர் 2025 (15:27 IST)
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் தி.மு.க. மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  ஆகியவற்றுக்கு இடையேயான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.  
 
தி.மு.க.வின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஒருவர், விஜய் மீது இந்த புகாரை அளித்துள்ளார். அதில், "விஜய், முதல்வர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக" குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், முதல்வரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த கருத்துகள் உள்ளிட்ட விஜய்யின் பேச்சு, மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தன்னை மக்கள் சந்திப்பதை தடுக்க முயற்சிப்பதாக விஜய் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், தி.மு.க.வின் இந்தப் புகார், ஆளும் கட்சிக்கும், விஜய்க்கும் இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.  
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025 நோபல் பரிசு: மருத்துவ துறையில் 3 பேருக்கு நோபல்!

இது வெறும் தவறோ அல்லது அலட்சியமோ அல்ல, பெரும் அரசியல் குற்றச்செயல் ஆகும்.. செல்வப்பெருந்தகை

கரூர் நெரிசலில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்துதான்: திருமாவளவன்

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பி மீது தாக்குதல்.. மே.வங்க அரசுக்கு கடும் கண்டனம்..!

இருமல் மருந்துக்கு அனுமதி வழங்கியவர்களை விட்டுவிட்டு டாக்டரை கைது செய்வது ஏன்? மருத்துவ சங்கம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments