Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

Mahendran
சனி, 7 ஜூன் 2025 (12:26 IST)
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
பாட்டாளி மக்கள் கட்சியில், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில், சமூக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த சந்திப்பு முடிந்ததும், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைச்சாமி ஆகிய இருவரும் டாக்டர் ராமதாசை சந்தித்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருவரும் பேசியதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ் இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த போது, “ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைச்சாமி இருவருமே என்னுடைய நீண்ட கால நண்பர்கள். நட்பின் அடிப்படையில் சில ஆலோசனைகள் நடத்திச் சென்றனர். வேறு அரசியல் காரணம் எதுவும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே," என்றும் அவர் தெரிவித்தார்.
 
இருப்பினும், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments