Publish Date: Thu, 28 Jan 2021 (20:51 IST)
Updated Date: Thu, 28 Jan 2021 (20:52 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் முகாம் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த வருடம் சிறிது காலதாமதம் ஆனாலும் தற்போது போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் ஜனவரி 31ல் நடைபெற உள்ளதாக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 43 ஆயிரத்து 56 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள், கொரோனா தொற்று பாதிக்காத குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது