கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்ட நிலையில் இன்று இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் சொட்டு மருந்து வழங்கப்படுவதுடன், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், சோதனை சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் சொட்டு மருந்து முகாம் ஏற்படுத்தப்பட்டு சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.