துப்பாக்கி முனையில் ராம்குமாரை மிரட்டிய காவல்துறை: பகீர் தகவல்!
துப்பாக்கி முனையில் ராம்குமாரை மிரட்டிய காவல்துறை: பகீர் தகவல்!
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது தற்கொலை அல்ல கொலை என பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வருகிறனர்.
இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவரது வழக்கறிஞர் மூலம் ராம்குமார் அனுப்பிய கடிதத்தில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
சுவாதியை யாரென்றே எனுக்கு தெரியாது என கூறிய ராம்குமார் அந்த கடிதத்தில், வேண்டும் என்றே ஒருதலைபட்சமாக குற்றவாளியை மறைத்து என்னை போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள் என கூறினார்.
மேலும் போலீசார் என்னிடம் விசாரித்த போது அந்த பெண் யார் என்றே எனக்கு தெரியது என்று தான் கூறினேன் என ராம்குமார் அந்த கடிதத்தில் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இந்த கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.