Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களில் யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர்

எங்களில் யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர்
, திங்கள், 23 ஜனவரி 2017 (21:40 IST)
காவல்துறையினர் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஜாட்ஜ் தெரிவித்துள்ளார்.


 

 
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியதாவது:-
 
மெரினாவில் போராட்டக்காரர்களிடம் அரசு எடுத்த நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு சட்டம் குறித்தும் காவல் துறை சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மிகவும் பொறுமையாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
போராட்டம் துவக்கத்தில் அமைதியாக அறவழியில் சென்றது. அதை காவல் துறை தரப்பிலும் பாராட்டினோம். போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது உளவுத் துறை மூலம் தெரியவந்தது. அந்த நபர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு சென்றார்கள்.
 
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேறிய பிறகு கலைந்து செல்ல அறிவுறுத்தினோம். அறவழியில் போராடிய பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்றனர். சில பிரிவினர் மட்டுமே தொடர்ந்து போராடினர். சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது போல, தாக்குவது போல போன்ற தவறான தகவல் பரப்படுகின்றன. 
 
காவலர்கள் மீது தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோதிகளை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து போராட்டத்தின்போது சமூக விரோத கெடுதல்: மார்க்கண்டேய கட்ஜூ