Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுகுழுவுக்கு அனுமதி தரக்கூடாது! – ஓபிஎஸ் மனுவை நிராகரித்த போலீஸ்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (10:15 IST)
நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஓபிஎஸ் அளித்த கோரிக்கை மனுவை காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓபிஎஸ் கோரிக்கை மனுவை அளித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது. பொது இடத்தில் கூட்டம் நடந்தால் மட்டுமே அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும். தனிநபர் கட்டிடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காவல்துறை தடைவிதிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்வாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments