Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடம் போலீசார் விசாரணை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (13:06 IST)
சுவாதி கொலை தொடர்பாக, அவரது நண்பர் முகம்மது பிலால் மாலிக்கிடம் போலீசார் தற்போது விசாரனை நடத்தி வருகிறார்கள்.


 

 
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு பக்கம், இதில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பதாக பல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
முக்கியமாக, கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி யாரோ ஒரு வாலிபர் கன்னத்தில் அறைந்ததாகவும், அதற்கு சுவாதி பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்காமல் ரயிலில் ஏறி சென்றதை தான் பார்த்ததாக, செங்கல்பட்டில் ஒரு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் தமிழரசன் என்பவர் நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.
 
அந்த வாலிபர் பெங்களூர் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கும் சுவாதிக்கும் என்ன பிரச்சனை என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது. அதேபோல், சுவாதியின் நெருங்கிய தோழரான முகம்மது பிலால் மாலிக்கிற்கும் தொடர்பிருக்கலாம் என பேசப்படுகிறது.
 
சுவாதி கொலை செய்யப்பட்டவுடன், அவர் பிலால் மாலிக் என்ற வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால், சுவாதியின் நெருங்கிய நண்பராகிய அவரிடம் போலீசார் இதுவரை பெரிதாக விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது. 
 
தற்போது ராம்குமாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள். அவரிடம் மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்.
 
இந்நிலையில், பிலால் மாலிக் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் தலையில் ஹெல்மெட்டுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இதனைத் தொடர்ந்து சுவாதி வழக்கில் போலீசார் விசாரணை சூடு பிடித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments