Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்போர்ட்டுடன் ஆஜராக வேண்டும் - சோபியாவுக்கு போலீஸ் சம்மன்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (17:20 IST)
ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ள சோபியாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ளார்.
 
அதேபோல், தன் மகள் சோபியாவுக்கு தமிழிசை மற்றும் அவருடன் இருந்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில், சோபியா தன் அசல் பாஸ்போர்ட்டுடன் வருகிற 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments