Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக கொடிகளை கட்டி பிரச்சாரம் ; 5 வேன்கள் பறிமுதல் - ஓ.பி.எஸ் அணி அதிர்ச்சி

Advertiesment
அதிமுக கொடிகளை கட்டி பிரச்சாரம் ; 5 வேன்கள் பறிமுதல் - ஓ.பி.எஸ் அணி அதிர்ச்சி
, வியாழன், 6 ஏப்ரல் 2017 (18:24 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக கொடிகளை கட்டி பிரச்சாரம் செய்த 5 வேன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 


 

 
ஆர்.கே.நகரில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே டி.டி.வி. தினகரன், ஓபிஎஸ் அணி, பாஜக சார்பில் போட்டியிடும் கங்கை அமரன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
 
தமிழகத்தில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் மிஞ்சும் வகையில் ஆர்.கே நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சம் 4000 வரை அளிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாமல் பரிசு பொருட்கள், மளிகை கடை பில் என புது புது வியூகங்களை கையாண்டு வாக்காளர்களை கவருவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றது. இதில் அதிகபட்சமாக அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் தரப்பு மீது தான் புகார்கள் வருகின்றன. மற்ற கட்சிகளும் அவருக்கு போட்டிப்போட்டு பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், தேர்தல் கமிஷனின் தடையை மீறி, அதிமுக கொடிகளை கட்டி பிரச்சரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 5 வேன்களை காவல் அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் அவைகள் ஓ.பி.எஸ் அணிக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்போது புரிகிறது.. சமக வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்று..