Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமா? நீதிமன்றத்தில் விளக்கம்..!

amar prasath reddy
, புதன், 8 நவம்பர் 2023 (16:25 IST)
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டம் எதுவும் இல்லை என தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் இருந்த கொடியை காவல்துறையினர் அகத்திய போது  வன்முறையில் ஈடுபட்டதாக அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். 
 
அதன் பின்னர் தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது  போஸ்டரில் பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கிலும் கைது செய்யப்பட்டார். ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் இன்னொரு வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. 
 
இந்த நிலையில் தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக அமர் பிரசாத் ரேட்டி மனைவியின் நிரோஷா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
இதற்கு தாம்பரம் காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க தற்போது திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரியில் மாணவனுக்கு மொட்டை அடித்து ராகிங்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்