கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இளம்பெண் சுவாதி. இந்த கொலையை செய்த மர்ம நபர் யார் என்ற தகவல் இன்னமும் தெளிவாக தெரியவில்லை.
காவல் துறை தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கொலை செய்தவன் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கலாம் என ஆராய்ந்ததில் அவனது புகைப்படம் சிக்கியது.
ஆனால் அந்த புகைப்படம் தெளிவில்லாமல் இருந்தது. இந்நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படத்தை தொழில்நுட்ப உதவியுடன் கொஞ்சம் தெளிவாக வெளியிட்டுள்ளனர் காவல் துறையினர்.
இந்த புகைப்படத்தில் உள்ள நபரை யாராவது பார்த்திருந்தாலோ, தகவல் தெரிந்தாலோ காவல் துறைக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.