மதுரையில் நடந்த சித்திரை திருவிழா பாதுகாப்பில் பணியாற்றிய போலீசார் கதிரவன் மார்க்ஸ், த.வெ.க. கட்சி கொடியை அணிந்து விஜய்க்கு மரியாதை செலுத்தி மாலை அணிவித்ததால், அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஏட்டு கதிரவன் மார்க்ஸ், விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். அவர், இப்போது விளக்குத்தூண் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் நிலையில், சித்திரை திருவிழா வேளையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இதனிடையே, நடிகர் விஜய் கொடைக்கானலுக்கு படப்பிடிப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து மதுரை வந்தார். அவரை சந்திக்க ஆர்வமாக இருந்த கதிரவன், பணி நேரத்தில் 'பெர்மிஷன்' வாங்கி விஜய் கட்சி கொடி அணிந்து, விஜய்க்கு மாலையும் கொடுத்து வழியனுப்பினார்.
இந்த வீடியோ, மதுரை காவல்துறை ஆணையாளர் லோகநாதன் பார்வைக்கு சென்ற பிறகு, கதிரவனை 'சஸ்பெண்ட்' செய்யும் உத்தரவை பிறப்பித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.