Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவுண்டுவுட்டா நீங்கள்லாம் பெரிய ஆளா? பாஜகவினரை அலறவிட்ட போலீஸ்காரர்

Advertiesment
சவுண்டுவுட்டா நீங்கள்லாம் பெரிய ஆளா? பாஜகவினரை அலறவிட்ட போலீஸ்காரர்
, வியாழன், 3 ஜனவரி 2019 (16:08 IST)
கேரள பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற பாஜகவினரை போலீஸ்காரர் ஒருவர் எச்சரிக்கை விடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடும் எதிர்ப்பையும் மீறி சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் தமிழக - கேரள எல்லையான கலியக்காவிலையில் வந்த கேரள அரசுப்பேருந்தை மறித்த பாஜகவினர், பேருந்தை சேதப்படுத்த முற்பட்டனர். அத்தோடு பேருந்தின் ஓட்டுனரையும் தாக்க முற்பட்டனர்.
 
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர், மோகன அய்யர், பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற பாஜகவினரை கண்டமேனிக்கு வறுத்தெடுத்தார். அவ்வளவு பெரிய ஆளா நீங்கள், சண்டை போடுறதுன்னா பார்டர்ல போய்ட்டு சண்ட போங்க என பேசினார். பின்னர் அங்கிருந்த பேருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ்காரரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்தவுடனே திமுக உறுப்பினராகிவிட்டாரா உதயநிதி? நெட்டிசன்கள் கிண்டல்