Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொலை மிரட்டல் புகார் : தாடி பாலாஜியிடம் போலீசார் விசாரணை

Advertiesment
Thadi balaji
, புதன், 11 அக்டோபர் 2017 (14:18 IST)
நடிகர் பாலாஜி மற்றும் அவரது மனைவியிடம் கொலை மிரட்டல் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


 

 
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றன. அதைத் தொடர்ந்து, பாலாஜியின் மனைவி நித்யா, பாலாஜியிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அந்நிலையில், கடந்த சில நாட்களாக தனது மனைவியை புகைப்படம் எடுத்து, மனோஜ் குமார் என்பவர் தன்னை மிரட்டி வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் பாலாஜி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
 
அதேபோல், தாடி பாலாஜி தொடர்புடைய சில வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.  இந்நிலையில், பாலாஜி அளித்த புகார் தொடர்பாக விசாரிக்கு அவரையும், அவரது மனைவி நித்யாவையும் வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களின் நேற்று விசாரணை நடத்தினர். மேலும், மனோஜ்குமார் இன்று ஆஜராக வேண்டும் என போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் ஆதரவு எம்எல்ஏ மீது ஓபிஎஸ் ஆதரவாளர் சரமாரி தாக்குதல்?