கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வேதவியாசன் . இவர் தூத்துக்குடியில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் வேதவியாசன் வீட்டில் திருட்டு நடந்து விட்டது. அதில் நகை பணம் என எல்லாவற்றையும் திருடர்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
அதனையடுத்து காணாமல் போன நகையை கண்டுபிடித்து தருமாறு களியக்காவினை போலீஸில் புகார் அளித்தார் வேதவியாசன்.
சில நாட்கள் கழித்து களியக்காவினை இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் திருட்டு நகையை மீட்டு விட்டார். ஆனால் அதை தன்னிடம் தரவில்லை என அவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 3 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது கோட்டாறு காவல் நிலையத்தில் இன் ஸ்பெக்டராக பதவியில் இருக்கும் அன்புபிரகாஷ் மீது லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்கு செய்துள்ள நிலையில் இனி அடுத்து என்ன நடக்குமோ என இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் உள்பட இதர போலீஸாரும் பீதியில் உள்ளனர்