Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொள்ளையனை பிடித்ததற்கு மொட்டையடித்து நேர்த்திகடன் செலுத்திய போலீஸார்!!

Advertiesment
கொள்ளையனை பிடித்ததற்கு மொட்டையடித்து நேர்த்திகடன் செலுத்திய போலீஸார்!!

Arun Prasath

, புதன், 16 அக்டோபர் 2019 (13:00 IST)
திருச்சியில் வங்கி கொளையன் பிடிபட்டதால், கோயிலில் மொட்டையடித்து நேத்திக்கடன் செலுத்தியுள்ளனர் காவலர்கள்.

கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி, திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தது. கொள்ளையர்களை பல்வேறு மாநிலங்களில் 9 மாதங்களாக போலீஸார் தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் லலிதா ஜூவல்லரியில் திருடிய கும்பல் தான் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவலையடுத்து வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

9 மாதங்களாக கொள்ளை கும்பலை தேடி வந்த நிலையில் தற்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் பிடிப்பட்டுள்ளதை அடுத்து, திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் விஜயகுமார் என்பவர் திருச்சி ஒப்பிலியப்பன் கோவிலிலும், ஹரிஹரன் என்பவர் சமயபுரம் கோவிலிலும் மொட்டையடித்து நேத்திக்கடனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்துக்கும் சம்மன் அனுப்ப வேண்டும்! – கோத்துவிட்ட சீமான்!