Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக வெற்றிக் கழக மாநாடு: 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

தமிழக வெற்றிக் கழக மாநாடு: 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

Siva

, வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:18 IST)
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், இந்த கட்சியின் கொடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி சாலையில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாநாடு நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார்.

இந்த மனு பரிசீலிக்கப்பட்டு, தற்போது 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிபந்தனைகளில் சில தளர்வுகள் அளிக்க வேண்டும் என கட்சியின் சார்பில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்; சாலைகளின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள், முதியோர்களுக்கு தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மாநாட்டு திடலில் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும், குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுகாதாரமான உணவு போன்றவற்றை மாநாட்டுக்கு வருபவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளுடன், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!