Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலத்தவர் குறித்து அவதூறு! – சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (10:49 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வடமாநிலத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் அவ்வபோது பேசும் சில கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சீமான் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து பல பகுதிகளில் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சமீபமாக வடமாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அருந்ததியர் மக்கள் குறித்து பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வடமாநிலத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments