Publish Date: Sun, 29 Aug 2021 (08:48 IST)
Updated Date: Sun, 29 Aug 2021 (08:52 IST)
மதுரையில் கட்டுமான பணிகளின்போது மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளின்போது அதன் கட்டுமானங்கள் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை தல்லாக்குளம் போலீஸார் மேம்பால ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டிமுடிக்கும் முன்னரே மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.