Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்கு!

Advertiesment
Nam Tamilar Katchi Menaga
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (10:38 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிரபலமான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மேனகா என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கலும் செய்துள்ளார். நேற்று வேட்பாளர் மேனகா விவசாயி சின்னம், கரும்பு சகிதம் ஏராளமான கட்சியினருடன் பேரணியாக வந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறுதல், அனுமதி பெறாமல் பேரணி செல்லுதல், கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தி பேரணி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடங்குகிறதா இரட்டை இலை? தேர்தல் ஆணையத்தின் பதிலால் பரபரப்பு!