4 மாசத்துல 20 கோடி வசூல்: அசர வைக்கும் காவல்துறை!!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (11:32 IST)
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,73,576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என தமிழக காவல்துறை அறிவிப்பு. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.         
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.      
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 9,73,576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 6,85,415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 8,81,434 வழக்குகள் பதிவு, ரூ.20.69 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

இன்று ஒரே நாளில் 300 ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments