Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிகுறியே இல்லாமல் கொரோனா: தனிமையில் கார்த்தி சிதம்பரம்!

Advertiesment
அறிகுறியே இல்லாமல் கொரோனா: தனிமையில் கார்த்தி சிதம்பரம்!
, திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதேந்திர சிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
 
அதேபோல் ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் தமிழகத்தில் பல எம்.எல்.ஏ, எம்.பி.களுக்கு கொரோனா உறுது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தகவல் வெளியிட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து இவரது குடும்பத்தாரும் கொரோனா சோதனைக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்மொழி கொள்கையை எதிர்த்ததற்கு நன்றி! – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் ட்வீட்!