Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.15.17 கோடி அபராதம் வசூல்!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (11:09 IST)
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,23,920 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.       
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.     
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,23,920 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 5,35,640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 6,64,944 வழக்குகள் பதிவு, ரூ.15.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments