10 கோடி தேத்தியாச்சு.. பட வசூலை மிஞ்சும் அபராத வசூல்!!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (10:35 IST)
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக  வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 
   
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 4,48,456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 5,44,566 வழக்குகள் பதிவு, ரூ.10.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments