Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

Prasanth K
செவ்வாய், 1 ஜூலை 2025 (13:38 IST)

சிவகங்கையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த அஜித்குமாரை, காவலர்கள் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவில் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை சமீபத்தில் நகை திருட்டு வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

போலிஸார் விசாரணை என்ற பெயரில் அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, கொலை வழக்கில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

 

அஜித்குமார் வழுக்கு விழுந்து வலிப்பு வந்து இறந்ததாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அஜித்குமாரை காவலர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கி சீருடையில் வராமல் கலர் ட்ரெஸ்ஸில் வந்த அவர்கள் அஜித்குமாரை இழுத்துச் சென்று கோவில் கோசாலையில் வைத்து அடித்து துன்புறுத்தி விசாரித்ததாகவும், குடிக்க தண்ணீர் கேட்டபோது மிளகாய் தூளை கரைத்து வாயில் ஊற்றியதாகவும் அவருடன் விசாரணையில் அழைத்துச் செல்லப்பட்ட வினோத் கூறியுள்ளார். 

 

அதை உறுதிப்படுத்தும் விதமாக காவலர்கள் அஜித்குமாரை துன்புறுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

6 சமோசா லஞ்சம்..! பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பஞ்சாயத்து! - உ.பி போலீஸின் ஈனச் செயல்!

திருமணமான நான்கே நாளில் புதுப்பெண் தற்கொலை! தமிழகத்தை உலுக்கும் வரதட்சணை கொலைகள்!

இரவோடு இரவாக கரண்ட் பில் உயர்வு!? மருந்துக்குக் கூட மனிதாபிமானம் இல்லையா? - அன்புமணி கண்டனம்!

பட்டப்பகலில் நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்! - ஆஸ்பத்திரியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments