Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடை மெஷினை வீசிய போலீஸ்; சிறுவனை தாக்கிய போலீஸ்! – சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள்!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (10:49 IST)
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் கொண்டு செல்லப்பட்ட நபர்கள் இறந்த விவகாரத்தை தொடர்ந்து போலீஸார் அத்துமீறல் வீடியோக்களை பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் தாக்குதலாலேயே அவர்கள் இறந்ததாக பலர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் போலீஸார் மக்களை வெவ்வேறு இடங்களில் தாக்கிய மற்றும் அத்துமீறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் ராஜா. வழக்கம்போல கடையை அவர் திறந்து வைத்திருந்த நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ரகுராமன் என்பவர், ராஜா கடையை திறந்து வைத்திருந்ததற்கு ஆவேசமாக பேசியதுடன் அங்கிருந்த எடை மெஷினையும் தூக்கி போட்டு உடைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைபோலவே திருச்சியில் 10ம் வகுப்பு படிக்கு சிறுவன் மாஸ்க் அணியாமல் வெளியே வந்ததற்காக போலீஸார் தடியால் அடிக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. மக்களிடன் அத்துமீறாமால் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் என காவலர்களுக்கு முதல்வர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments