நடு வீதியில் பெண்ணை தாக்கும் போலீஸ்: கொடுமை! (வீடியோ இணைப்பு)
நடு வீதியில் பெண்ணை தாக்கும் போலீஸ்: கொடுமை! (வீடியோ இணைப்பு)
Publish Date: Wed, 29 Mar 2017 (11:07 IST)
Updated Date: Wed, 29 Mar 2017 (11:12 IST)
பொதுவாகவே போலீஸ் என்றால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பயம் மற்றும் வெறுப்பு இருக்கும். இதற்கு காரணம் ஒரு சில போலீசார் நடந்துகொள்ளும் முறைதான். சட்டம் ஒழுங்கை காப்பாற்றி பொதுமக்களை பாதுகாக்கும் போலீஸ் சில சமயம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.
சமீபத்தில் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மீது தடியடி நடத்திய போலீஸ் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏதோ போராட்டம் ஒரு போராட்டத்தில் பெண் ஒருவரை ஆண் போலீஸ் மனசாட்சி இல்லாமல் தாக்குதல் நடத்தும் வீடியோ தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. கீழே விழுந்த பெண் மீண்டும் எழும்பவில்லை, அவரை சுற்றி அவரது உறவினர்கள் பரிதவிப்பதை பார்த்தால் சற்று பற்றமாகத்தான் உள்ளது.