Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிக்டாக்கில் மாணவிகளுக்கு வலை வீசிய காதல் மன்னன்: போலீஸ் வலையில் சிக்கினார்!

Advertiesment
டிக்டாக்கில் மாணவிகளுக்கு வலை வீசிய காதல் மன்னன்: போலீஸ் வலையில் சிக்கினார்!
, செவ்வாய், 3 மார்ச் 2020 (10:50 IST)
பெண்களை ஆபாசமாக படமெடுத்து அட்ராசிட்டி செய்து வந்த டிக்டாக் பிரபலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் டிக்டாக் பெரும் பொழுதுபோக்கு சாதனமாக மாறியிருக்கும் சூழலில் அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளும் வந்த வண்ணம் உள்ளன. டிக்டாக்கால் பெரும்பாலும் பிரச்சினைக்கு உள்ளாவது இளைஞர்கள் மற்றும் திருமணமான பெண்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது டிக்டாக் பிரபலம் ஒருவர் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசியை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ”காதல் மன்னன் கண்ணன்” என்ற பெயரில் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு ஃபாலோவர்களும், லைக்குகளும் அதிகமாகவே பல பெண்களுடன் இணைந்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

கண்ணன் பெண்களை ஆபாசமாக பெண்களை படம் எடுத்து மிரட்டுவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை கைது செய்து போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது சுமார் 40க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்து டிக்டாக்கில் இவர் பகிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பல பெண்களிடம் வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் - பான் இணைக்கவில்லையா? ரூ.10,000 அபராதம்!!