Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐடிஐ மாணவருக்கு கத்திக்குத்து: 3 பேர் அதிரடி கைது!

ஐடிஐ மாணவருக்கு கத்திக்குத்து: 3 பேர் அதிரடி கைது!
, வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (18:48 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஐடிஐ மாணவன்  ஒருவரை ஒடஒட விரட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தவர் ரஞ்சித். 19 வயதான இவர் தனது பெற்றோர்களுடன் நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக சென்றவர், நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் பிணமாக கிடந்துள்ளார்.
 
இவரை மர்ம நபர்கள் ஒடஒட விரட்டி கொலை செய்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தக் கொலை தொடர்பாக போலிஸார் 2 தனிப்படை அமைத்து விசாரித்ததில், வடபழனினயச் சேர்ந்த கார்த்திகேயன், சாலி கிராமத்தைச் சேர்ந்த நவின் குமார், போரூரைச் சேர்ந்த சிவ கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் கைதான 3 பேரும் செல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என போலீஸார்க்கு தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 மணி நேரம் வீடியோ கேம்: இளைஞரின் பரிதாப நிலை??