Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமி அனுமதியில்லாமல் போயஸ் கார்டனில் சோதனை நடந்திருக்குமா?

எடப்பாடி பழனிச்சாமி அனுமதியில்லாமல் போயஸ் கார்டனில் சோதனை நடந்திருக்குமா?

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (17:23 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதியில்லாமல் நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


 
 
கடந்த சில நாட்களாக சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து வருமான வரிதுறையினர் நடத்திய சோதனை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் 187 இடங்களில் 1600 அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை இந்தியாவின் மெகா ரெய்டாக பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று மாலை சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் ஷகிலா மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி அவர்கள் இருவரையும்  இரவு  9.10 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
 
21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை நடந்திருக்க கூடாது என அதிமுகவினர் அனைவரும் கருதுகின்றனர். இது வேதனை அளிக்கிறது என மைத்ரேயன் கூறினார். இதனால் போயஸ் கார்டனுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என தம்பிதுரை கூறினார்.
 
இந்நிலையில் இந்த சோதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதியில்லாமல் நடந்திக்குமா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதே கேள்வியை தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா கூறினார். முதல்வர் அனுமதியில்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடந்திருக்காது. வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments