Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனித்தே போட்டி... பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு!!

Advertiesment
தனித்தே போட்டி... பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு!!
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:38 IST)
தனித்து போட்டியிடுவோம் என புதுச்சேரி மாநில பாமக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ் பேசினார். 

 
சமீபத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ், அடுத்த தேர்தலில் என்ன செய்வீர்கள் எனக்கு தெரியாது. ஒவ்வொரு ஊரிலும் திண்ணை பரப்புரை, சமூக ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்ய வேண்டும். அடுத்த தேர்தலில் 234 தொகுதிகள் அறுபதில் நாம் வெல்லவேண்டும். 
 
உணவை பகிர்ந்து அவர்கள் வீட்டில் படுத்து தூங்கி நூற்றுக்கு நாற்பது சதவீதம் வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டுமென கட்சி கூட்டத்தில் ராமதாஸ் கட்டளையிட்டார். இந்நிலையில் புதுச்சேரி மாநில பாமக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ் பின்வருமாறு பேசினார். அவர் கூறியதாவது, 
 
webdunia
புதுச்சேரியின் பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது. புதுச்சேரி சிறிய மாநிலம், ஆனால் ஏன் 4 அல்லது 5 தொகுதிகளில் நின்று வெற்றிபெறும் அளவிற்கு வேலை செய்யவில்லை. கடந்த கால புதுச்சேரி வரலாற்றை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டப்பட்டேன்.
 
நான் தற்போது நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதெல்லாம் பாமக புத்துயிர் பெற்று புதுவையில் 3, காரைக்காலில் 2 என 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும். வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பாமக தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடைந்த கிருஷ்ணர் சிலைக்கு கட்டுப்போட்டு சிகிச்சை செய்த மருத்துவர்கள்!