Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் அன்புமணியாகிய நான்: 110 தொகுதிகளில் பாமக வெற்றிபெற்றிருக்கும்!

மீண்டும் அன்புமணியாகிய நான்: 110 தொகுதிகளில் பாமக வெற்றிபெற்றிருக்கும்!
, செவ்வாய், 24 மே 2016 (18:02 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாமக நாங்கள் வெற்றி பெற்று அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம் என அதிகமான நம்பிக்கையில் பேசிவந்தனர்.


 
 
தேர்தல் சமையத்தில் தன்னை ஒரு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார் அன்புமணி ராமதாஸ், தனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என தீவிர பிரச்சாரம் செய்தார் அன்புமணி. தாங்கள் ஆட்சி அமைப்போம் எனவும் உறுதியாக கூறிவந்தார் அவர்.
 
ஆனால் தேர்தல் முடிவுகள் அனைத்துக்கும் எதிர்மாறாக வந்தது. தேர்தல் நடைபெற்று முடிவு வந்த 232 தொகுதிகளிலும் பாமக தோல்வியை தழுவியது. அதன் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தான் போட்டியிட்ட பென்னாகரம் தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் அதிமுக, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது. பாமகவுக்கு 110 தொகுதிகள் கிடைத்திருக்கும் கூறினார்.
 
தேர்தல் ஆணையம் சரியாக முறையில் செயல்படவில்லை, அனைத்து தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பணம் செலவு செய்யாமல் அதிமுக, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது, பாமக சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை. இந்த தேர்தல் பணப் பட்டுவாடா இல்லாமல் நேர்மையான முறையில் நடைபெற்றிருந்தால், சுமார் 110 தொகுதிகளில் பாமக வெற்றிபெற்றிருக்கும் என்றார் அன்புமணி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த், திருமாவளவன் தோற்பார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை - வைகோ