Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களை பண்டமாக்கும் இழி செயல்: கொதித்துப்போன ராமதாஸ்!

Advertiesment
பெண்களை பண்டமாக்கும் இழி செயல்: கொதித்துப்போன ராமதாஸ்!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:36 IST)
வரதட்சணைக்கு ஆதரவாக பாடநூல் வெளியிட்ட பல்கலைக்கழகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது. 

 
சமீபத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் வெளியிட்ட பாடநூலில் வரதட்சணை என்பது பெண்களுக்கு பாதுகாப்பானது என்றும் அழகற்ற பெண்கள் வரதட்சணை மூலம் தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. 
 
இத்னைத்தொடர்ந்து இது குறித்து ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. TK Indrani என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. 
 
அசிங்கமான பெண்களை கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களை பண்டமாக பார்க்கும் இழி செயலாகும். இந்தக் கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு? எனத் தெரியவில்லை.
 
வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 300ஆக அதிகரிப்பு!