அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் பாமக ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று நிபந்தனை விதித்து உள்ள நிலையில் தற்போது புதிய ஒரு நிபந்தனையும் விதித்துள்ளதால் அதிமுக கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது
அதிமுக கூட்டணியில் பாமக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வந்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என்று பிடிவாதமாக பாமக உள்ளது
இந்த நிலையில் தற்போது புது நிபந்தனையாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
இந்த நிபந்தனையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்று அதிமுக கூட்டணியில் பாமகவை இணைப்பாரா? அல்லது நிபந்தனையை ஏற்காமல் பாமகவை கூட்டணியில் இருந்து விலக்கி வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்