Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட முயல்கிறது பாமக - திருமாவளவன் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (20:36 IST)
தமிழகத்தை வன்முறைக் காடாக்க பாமக முயற்சி மேற்கொள்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது பொன்பரப்பி என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. இதுசம்பந்தமாக சில நாட்களுக்கு முன்னர் பாமக சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சில விளக்கங்களை முன்வைத்தனர்.
 
இந்நிலையில் பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறையை தொடர்பாக திருமாவளவன் அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில், பொன்பரப்பி வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர் எஸ்றா சற்குணம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் ஆகியோருக்கு எதிராக பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
 
இம்மாதிரி வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயல்படும் ராமதாஸின் வெறுப்பு அரசிலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 
மேலும் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் மிகப்பெரிய வன்முறையைத் தூண்ட ராமதாஸ் தயாராகி வருகிறார் என்பது  அவரது அறிக்கையிலேயே தெரிக்கிறது. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும்  என்று இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?

சென்னை அருகே 'ஃபெங்கல்' புயல் கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு

மாணவரின் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments