Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் பாமக? விடுதலை சிறுத்தைகள் விலகுகிறதா? முதல்வர் விளக்கம்..!

Siva
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (12:08 IST)
திமுக கூட்டணியில் பாமக இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தற்போது திமுக கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடது மற்றும் வலது கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகள் உள்ளன. இதே கூட்டணி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் தொடரும் என்று திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் திடீரென பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற இருப்பதாகவும், அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கட்சியை இந்த கூட்டணியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.
 
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று கூறுவது வதந்தி" என்றும், "திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று கூறும் செய்திகள் முழுக்க முழுக்க வதந்தி" என்றும் கூறினார்.
 
"திமுக கூட்டணியில் தற்போது உள்ள  கட்சிகள் உறுதியாக உள்ளன. இந்த கூட்டணி மாறாது" என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

திமுக எம்பி டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..!

பைக் ஓட்டிக்கொண்டே ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன்.. விபத்து ஏற்பட்டு பரிதாப பலி..!

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் புகுந்தது ஏன்? - ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம்!

இந்தியாவுக்கு உரங்கள், தாதுக்கள் மீண்டும் ஏற்றுமதி! கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா!

அடுத்த கட்டுரையில்
Show comments