பாமகவை அடுத்து தேமுதிகவும் பாஜக கூட்டணியில்? தனித்து விடப்படுகிறதா அதிமுக?

Siva
செவ்வாய், 19 மார்ச் 2024 (07:24 IST)
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் இரு கட்சிகளும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் வரை அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதி என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை திடீரென நிலவரம் மாறி பாஜக கூட்டணியில் இணைவதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாகவும் இன்று அல்லது நாளை இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் பாமக இணைந்து விட்டால் தேமுதிகவும் பாஜக கூட்டணியில் தான் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிமுக தனித்து விடப்பட்டதாக கருதப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இணையும் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிக தொகுதிகள் கொடுக்க இருப்பதாகவும் அதே போல் இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்க இருப்பதாகவும் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகள் பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் அந்த கூட்டணியில் இணைந்தால் அந்த கூட்டணி வலுவான கூட்டணியாகவும் திமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் இருக்கும் கூட்டணியாகவும் கருதப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments