Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் ‘நாட்டு நாட்டு’, இந்தியாவில் ‘ஸ்பைடர்மேன்’: பிரதமர் மோடியின் கலகல பேச்சு..!

Advertiesment
அமெரிக்காவில் ‘நாட்டு நாட்டு’, இந்தியாவில் ‘ஸ்பைடர்மேன்’: பிரதமர் மோடியின் கலகல பேச்சு..!
, வெள்ளி, 23 ஜூன் 2023 (09:00 IST)
அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் நாட்டு நாட்டு பாடலை பாடுகின்றனர் என்றும் இந்தியாவில் உள்ள ஒரு இளைஞர்கள் ஸ்பைடர் மேன் படத்தை பார்த்து ரசிக்கின்றனர் என்றும் அமெரிக்கா சென்று உள்ள பிரதமர் மோடி கலகலப்பாக பேசி உள்ளார். 
 
இதில் இருந்து இந்தியா அமெரிக்கா இடையே கலாச்சார பரிமாற்றம் உள்ளது என்பது தெரிய வருகிறது என்றும் அமெரிக்க அரசு நடத்திய விருந்து நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார். 
 
மேலும் ஜனநாயக உணர்வின் பரிணாம வளர்ச்சியில், இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, சமத்துவம், கண்ணியத்தை ஜனநாயகம் அங்கீகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் இந்தியாவில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன, பல்வேறு மாநிலங்களில் சுமார் 20 வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன, இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிளைமொழிகள் உள்ளன, இருப்பினும் நாங்கள் ஒரே குரலில் பேசுகிறோம் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார்,.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோகத்தில் முடிந்த டைட்டானிக் பயணம்; 5 பேரும் ஆழ்கடலில் மூழ்கி பலி?– அமெரிக்க கடற்படை அறிவிப்பு!