Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (20:53 IST)
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. எனவே அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன்,கம்யூனிஸ்ட்.,  மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியானது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  இன்று திருவண்ணாமலையில்  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இன்றைய பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
 
இந்த தேர்தல் களம் இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை  அழித்திட்டால் தடுக்க ஜனநாயக போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் கழக வேட்பாளர்களைக் கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் இம்முறை வெற்றி பெர வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும், 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ் நாட்டிற்கு செய்தது என்ன?தமிழ் நாட்டிற்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. உத்தரபிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றிப் பேசும்போதே , மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. இது ஏப்ரல் மாதம்தான்,. மோடியின் குழப்பம் வரும் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும் ’’ என்று கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments